அரசியல் தமிழகம்

எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி! கலைஞரின் இடத்தில் பூண்டி கலைவாணன் போட்டி

Summary:

Dmk candidate for thiruvarur announced

திருவாரூரில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. கலைஞரின் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் விருப்பமனு அளித்தனர். 

திருவாரூரில் திமுக சார்பில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், டி. ஆர் பாலு இவர்களில் ஒருவர் போட்டியிடுவார் என செய்திகள் பரவின. 

இந்நிலையில் திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. நேர்காணலின் முடிவில் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement