அரசியல் தமிழகம்

தேர்தலில் யாருடன் கூட்டணி.? சூடுபிடிக்கும் தேர்தல்களம்.! மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை.!

Summary:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் தொடர்பாக அளித்த பேட்டியில், ‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது என்றும், ஆனாலும் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித்தலைவர் விஜயகாந்த்தான் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் அளவுக்கு தே.மு.தி.க. வலுவாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் இன்று (13.12.2020) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். 


Advertisement