அரசியல் தமிழகம்

பூரண நலம் பெற்று சென்னை திரும்பும் விஜயகாந்த்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.!

Summary:

dmdk leader captan vijayakanth return to chennai

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் விஜயகாந்த். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். உடனிருந்து அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.

இதனைத் தொடா்ந்து அவருடைய அரசியல் பொறுப்புகளை தற்சமயம் ஏற்றுள்ள அவரது  மகன் விஜய பிரபாகரன் தே.மு.தி.க. தொடர்பான முக்கிய கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

Related image

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்ததும் இந்தியா திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இடையில் அவ்வபோது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் மீண்டும் சில மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு அமெரிக்காவுக்கு மனைவி பிரேமலதா உடன் சென்றார். தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று, சிறுநீரகப் பிரச்னைகளுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தே.மு.தி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாளை மறுநாள் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தனது சிம்மக் குரலில் கர்ஜிக்க விஜயகாந்த் தயாராகிவிட்டார் என்றும், அவரது குரலைக் கேட்க கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் காத்துள்ளனர்.


Advertisement