நாங்க போலீஸ்... சொல்றத மட்டும் தான் கேக்கனும்! 17 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்! பகீர் சம்பவம்...!!!



delhi-kalkaji-iskcon-temple-minor-gang-rape

தலைநகர் டெல்லியில் கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில் 17 வயது சிறுமிக்கு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. திங்கள்கிழமை இரவு ஆண் நண்பருடன் சென்றிருந்த சிறுமியை அணுகிய 3 பேர், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

போலீஸ் எனக் கூறி மிரட்டிய மர்ம நபர்கள்

இரவு சுமார் 7.30 மணியளவில் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 3 பேர் சிறுமியையும் அவரது ஆண் நண்பரையும் வழிமறித்துள்ளனர். தாங்கள் போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிய அவர்கள், இருவரையும் அங்கிருந்து செல்ல விடாமல் கடுமையாக மிரட்டியதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை தனியாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரவு நேரத்தில் பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமிக்கு.... தையல் கடைக்குள் நடந்த கொடூரம்! 56 வயது தையல்காரரின் வெறிச்செயல்..!!!

மருத்துவமனையில் சிறுமி; POCSO வழக்கு

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுமி என்பதால் POCSO சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

சம்பவம் நடந்த பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் சென்றவர்கள், சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். போலீஸ் என நாடகமாடி குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பேரையும் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ... கடவுளே.! வரதட்சணை கொடுமையால் நடந்த கொடூரம்! 5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த புதுப்பெண்... யார் காரணம்? குலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!!!