இந்த மாத்திரகள் சிறுநீரகங்களை செயலிழக்கும் அபாயம் உண்டு...! மத்திய அரசு வெளியிட்ட கீர் எச்சரிக்கை...!!!
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்ற சாதாரண உடல்நலப் பிரச்சினைகளுக்கு பலரும் சுயமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கவலைக்குரிய பழக்கமாக உள்ளது.
சிறுநீரகங்களை பாதிக்கும் சுய மருத்துவம்
சரியான மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் வீரியமிக்க மருந்துகளை அடிக்கடி அல்லது நீண்ட காலம் உட்கொள்ளும்போது, சிறுநீரகத்தின் ரத்தத்தை வடிகட்டும் நுண்ணிய அமைப்புகள் பாதிக்கப்படலாம். இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுகள் சேர்ந்து, சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறையும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: மாரடைப்பை தடுக்க உதவும் 5 காய்கறிகள்.! இந்த காய்கறி லிஸ்ட்டை உங்க சாப்பாட்டில் சேர்த்துக்கோங்க....!!!
குறிப்பாக வலி நிவாரணிகள் அதிகமாக பயன்படுத்தப்படும்போது சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படலாம். ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் அல்லது தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் தேவையில்லை
சளி, சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பொதுவாக பலன் அளிக்காது. இருப்பினும், உடனடியாக குணமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் தாமாகவே ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதுபோன்ற தேவையற்ற பயன்பாடு மருந்துகளின் செயல்திறன் குறைவதற்கும், உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம்.
மருத்துவர் பரிந்துரைப்படி மட்டுமே மருந்துகள்
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளும் பழக்கத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டாலும் தகுதியான மருத்துவரை அணுகி, அவர் குறிப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்துகள் அல்லது பிற மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பான நடைமுறையாகும். இதன் மூலம் சிறுநீரகங்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும்.