வாயில ஏதாச்சும் வந்துடும்..! உண்மையிலேயே தைரியம் இருந்தால் இத செய்யுங்க... அமைச்சர் ராஜ்மோகனுக்கு திமுக பரந்தாமன் விடுத்த அதிரடி சவால்..!!!



periyar-arivulagam-book-purchase-controversy

பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு சவால் விடுத்துள்ளார். புத்தகங்களுக்கான பணம் எந்தத் தேதியில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் திமுக - தவெக இடையிலான அரசியல் மோதல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

பணப் பரிவர்த்தனை ஆதாரத்தை வெளியிட பரந்தாமன் வலியுறுத்தல்

செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன்,  "வாயில் ஏதாவது வந்துவிடும்” என்று ஆவேசப்பட்டதோடு, அமைச்சர் ராஜ்மோகனுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்த தேதியில் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்ற ஆதாரத்தைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அதிரடியாகக் கேட்டுள்ளார். அகல்விளக்கு பதிப்பகம் தொடர்பான விவகாரத்தில் திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகக் கூறினார். வெறும் புகார்களை முன்வைப்பதை அமைச்சர் ராஜ்மோகன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: திமுக, அதிமுகவை ஒரே அலசில் அதிரவைத்த விஜய்! மயிலாடுதுறையில் இருந்து இரவோடு இரவாக... தவெகவில் இணைந்த 100+ நிர்வாகிகள்..! பரபரக்கும் அரசியல் களம்..!!!

மேலும், குறிப்பிட்ட புத்தகக் கொள்முதலுக்கான தொகை எப்போது பரிமாற்றம் செய்யப்பட்டது, அது யார் ஆட்சிக் காலத்தில் நடந்தது என்பதற்கான வங்கி ஆவணங்களை அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அமைச்சர் உண்மையிலேயே தைரியமாக இருந்தால், பணப் பரிவர்த்தனை நடந்த தேதிக்கான ஆதாரத்தை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.

திமுக - தவெக இடையே தொடரும் புத்தக சர்ச்சை

தொகுதி மறுவரையறை தொடர்பான புத்தகச் சர்ச்சை மற்றும் பெரியார் அறிவுலக நூலகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் என அடுத்தடுத்து விவகாரங்கள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பரந்தாமனின் கருத்துகள் இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

போலி எழுத்தாளர்கள் மற்றும் புத்தகக் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள புகார்களுக்கு தவெக அரசு உரிய ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசின் விளக்கம் வெளியாகும் நிலையில், விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் கவனிக்கப்படுகின்றன.

 

இதையும் படிங்க: அடுத்த ரவுண்ட்... 4000 கோடிக்கு மேல் மணல் ஊழல்! துரைமுருகன் உட்பட சிக்கிய 28 பேர்! 34 இடங்களில் சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்..!!!