24 வயது இளம்பெண் 3 பேர் கும்பலால் மானபங்கம்... பழனியில் பகீர் சம்பவம்.! 

24 வயது இளம்பெண் 3 பேர் கும்பலால் மானபங்கம்... பழனியில் பகீர் சம்பவம்.! 


dindigul-palani-girl-sexual-harassed-by-3-man-gang

3 பேர் கும்பலால் இளம்பெண் ஆபாசமாக வசைபாடப்பட்டு பாலியல் தொல்லையை சந்தித்த சோகம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, சின்னஐயம்புலிக்குளம் பகுதியில் வசித்து வரும் 24 வயது இளம்பெண் தனியே சாலையில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சரத் குமார் (வயது 25), கூலித்தொழிலாளிகள் கோட்டை முத்து (வயது 35), மதன் (வயது 26) ஆகியோர் பெண்ணை தகாத வார்த்தையால் பேசி மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

Dindigul

பதறிப்போன பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பெண்ணை மீட்டுள்ளனர். மேலும், சரத்குமார், கோட்டை முத்து, மதன் ஆகியோரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், காம கொடூரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.