திருமணமான 15 நாட்களுக்குள் விபரீதம்.. கருத்து வேறுபாட்டில் பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

திருமணமான 15 நாட்களுக்குள் விபரீதம்.. கருத்து வேறுபாட்டில் பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!


Dharmapuri Palacode Woman Suicide After Marriage within 15 Days Died

கணவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, புதுமண பெண் 15 நாட்களில் 2 முறை தற்கொலைக்கு முயற்சித்து, 2 ஆவது பரிதாபமாக பலியாகினார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, சோமனூர் பகுதியில் வசித்து வருபவர் கவுரப்பன். இவரின் மகன் மதன்குமார் (வயது 35). கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சரசு. இவரின் மகள் பிரியங்கா (வயது 31). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 16 ஆம் தேதி வெள்ளிச்சந்தை பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், திருமணமான முதல் நாளில் இருந்தே கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை நடந்து வந்துள்ளது. இதனால் கடந்த 25 ஆம் தேதி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில், சகோதரர் கதவை உடைத்து பிரியங்காவை காப்பாற்றி இருக்கிறார். இதற்கிடையில், நேற்று காரிமங்கலம் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு தம்பதிகள் விருந்துக்கு வந்துள்ளனர். 

Dharmapuri

அப்போது, பிரியங்கா திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண்மணியை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்காவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காரிமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 15 நாட்களே ஆவதால், வட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.