"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து விபரீதம்.. நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை..!
ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால், மனமுடைந்த மாணவன் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அருகாமையில் குரும்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆன்லைன் நீட் தேர்வு வகுப்புக்காக தன் தந்தை வாங்கித் தந்த மொபைலில், வெங்கடேஷ் RXCE என்ற ஒரு ஆன்லைன் கேமை பதிவிறக்கம் செய்துள்ளார்.
மேலும், அதில் பணம் கட்டி விளையாடத் தொடங்கிய நிலையில், அதற்கு முற்றிலுமாக அடிமையாகியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து 50 ஆயிரம் பணம் பெற்ற நிலையில், அனைத்தையும் ஆன்லைன் கேமில் முழுவதுமாக இழந்துள்ளார்.
இதில் மிகவும் மனமுடைந்த மாணவன் கடந்த சனிக்கிழமையன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின் இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வெங்கடேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.