15 வயது சிறுமியை கடத்தி, மாநிலம் மாநிலமாக பயணித்து பாலியல் பலாத்காரம்.. ஜிம் மாஸ்டர் கைது., அதிர்ந்துபோன அதிகாரிகள்.!

15 வயது சிறுமியை கடத்தி, மாநிலம் மாநிலமாக பயணித்து பாலியல் பலாத்காரம்.. ஜிம் மாஸ்டர் கைது., அதிர்ந்துபோன அதிகாரிகள்.!


Dharmapuri 15 Aged Minor Girl Kidnapped by Gym Master Abused Police Investigation

தர்மபுரியை சார்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பல மாநிலங்களில் வாழ்ந்து வந்த ஜிம் மாஸ்டர், தெலுங்கானாவில் வைத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக சிறுமி கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிக்குப்பத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 28). இவர் ஜிம் மாஸ்டராக இருந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 2 திருமணம் ஆகியுள்ள நிலையில், இரண்டு மனைவிகளும் விவாகரத்து செய்து பிரிந்து சென்றுள்ளனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியுடன், நரசிம்மன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். 

கடந்த 2020 ஆம் வருடம் அக். 5 ஆம் தேதி பெங்களூரில் இருந்து நரசிம்மன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரிக்கு வந்துள்ளார். மாணவியை தனியாக சந்தித்து பேசி கடத்தி சென்ற நிலையில், மகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

பெற்றோர்கள் வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்த நிலையில், தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படை காவல் துறையினர் நரசிம்மனின் செல்போனை வைத்து ஆய்வு செய்கையில், பெங்களூர், சென்னை, கேரளா, விசாகப்பட்டினம் போன்ற பல்வேறு இடங்களை காண்பித்துள்ளது.

Dharmapuri

நரசிம்மனை பிடிக்க தனிப்படை தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் எசங்காரெட்டி மாவட்டம், ஸ்நாபூர் பகுதியில் நரசிம்மன் இருப்பது உறுதியானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர், அம்மாநில காவல்துறையினர் உதவியுடன் நரசிம்மனை கைது செய்தனர். அவருடன் இருந்த மாணவியையும் மீட்டனர். அப்போது, மாணவியின் கைகளில் 8 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நரசிம்மன் சென்னையில் மாணவியுடன் குடும்பம் நடத்தியபோது அவர் கர்ப்பமானதும், 8 மாதத்திற்கு முன்னர் குரோம்பேட்டை மருத்துவமனையில் ஆன் குழந்தை பிறந்ததும் அம்பலமானது. நரசிம்மனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.