ஓட்டு போட சென்ற கர்ப்பிணி பெண்.! வாக்குசாவடியிலிருந்து அழகிய ஆண்குழந்தையோடு சென்ற அற்புதம்!!

ஓட்டு போட சென்ற கர்ப்பிணி பெண்.! வாக்குசாவடியிலிருந்து அழகிய ஆண்குழந்தையோடு சென்ற அற்புதம்!!


delievery-for-pregnant-lady-inside-voting-booth

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகேயுள்ள பெருந்துறைப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகு, நீலாவதி தம்பதியினர். நீலாவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் இவர்கள் கோயம்புத்தூரில் தங்கி கூலி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் அனைத்து குடிமக்களும்தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதை தவறாமல் செய்தனர். மேலும் இதற்காக நாட்டின் பல பகுதியில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று  தங்களது வாக்கினை பதிவு செய்து வந்தனர்.

pregnant

இந்நிலையில் ரகுவும்  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி நீலாவதியை அழைத்துக் கொண்டு வாக்களிக்க தனது சொந்த ஊரான பெருந்துறைப்பட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து  நேற்று மதியம் நீலாவதி உறவினர்கள் சிலருடன்   வாக்களிப்பதற்காக, அங்குள்ள அரசுபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த  வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளனர்.

 அப்போது, வாக்களிக்க வாக்குசாவடிக்குள் சென்ற நீலாவதிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவசரஅவசரமாக வாக்குப்பதிவு செய்து விட்டு அவர் வெளியே  வருவதற்குள் பிரசவவலி அதிகமாகியுள்ளது.

pregnant

அப்போது, அங்கு விமல் என்ற 108 ஆம்புலன்ஸ் டெக்னீஷியன் வாக்களிக்க வந்துள்ளார். பிரசவ வலியால் கர்பிணிப் பெண்  துடிப்பதை கண்ட அவர் அங்கிருந்த பெண்களுக்கு பிரசவம் பார்க்க அறிவுரை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து நீலாவதியின் உறவினர்கள் அங்கேயே பிரசவம் பார்த்துள்ளனர். மேலும் சுகபிரசவத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.