ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! "தயவுசெய்து குற்றவாளியை தண்டியுங்கள்..." தாயின் உருக்கமான வேண்டுகோள்.!!
தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த ராஜன் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியினர் தங்களது 2 மகளுடன் தெற்கு தெருவில் வசித்து வருகின்றனர். ராஜன் மதுரையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், ஜெயஸ்ரீ ஊஞ்சாம்பட்டியிலேயே பால் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி பால் கறக்க வரும் கறவைக்காரர் ரமேஷ், அங்கே தனியாக இருந்த ஜெயஸ்ரீயின் 15 வயதுடைய மூத்த மகள்ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பயந்த சிறுமி தப்பியோடி வந்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக, போலீசில் புகாரளித்த தாயார் பால்பண்ணையில் இருந்த சிசிடிவி கேமராவின் சாட்சிகளையும் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கடுத்து ஜூன் 4ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் காவல்துறை ரமேஷ் மீது எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் மன விரக்திக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தாயார் ஜெயஸ்ரீ, தனது கணவர் வெளியூரில் வேலை செய்யும் நேரத்தில் பால் பண்ணையில் பால் கறக்க வந்த ரமேஷ் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: "வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எனது மகள் தற்கொலை முயற்சி செய்தார். மேலும் கணவர் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில் ரமேஷ் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி பலரும் தொலைபேசியில் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக பால் பண்ணையை மூடியதாக தெரிவித்த அவர் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கண்ணீருடன் கூறினார். மேலும் குற்றவாளி ரமேஷ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்திரிக்கையாளர்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: "நீ இல்லனா நானும் இல்ல... " காதலை பிரித்த சமூகம்.!! இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு.!!