"நீ இல்லனா நானும் இல்ல... " காதலை பிரித்த சமூகம்.!! இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு.!!



young-couple-commits-suicide-parents-not-accept-love

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள ராயன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் மோகன்(26). கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரது மகள் பவானி(24) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

tamilnadu

மேலும் பவானியின் பெற்றோர் அவருக்கு வரன் பார்த்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவானி பெற்றோர் மீது கோபப்பட்டு கடந்த 20 ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட பெற்றோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: "காதலுக்காக தாயை விட்டுட்டியே.." காதலன் வீட்டு வாசலில் விஷமருந்திய தாய்.!!

இதனை கேள்விப்பட்டு வேதனையடைந்த காதலன் மோகனும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து மோகனை உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மோகனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் காதலுக்கு சம்மதிக்காததால் விஷம் குடித்து இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: கனவாய் போன வெளிநாட்டு வேலை.. கழுத்தை நெரித்த கடன் தொல்லை.!! வாலிபரின் சோக முடிவு.!!