புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி: துள்ளிகுதித்து வந்த புள்ளிமானை தட்டி தூக்கிய வாகனம்.!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி: துள்ளிகுதித்து வந்த புள்ளிமானை தட்டி தூக்கிய வாகனம்.!



deer accident in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் வனப்பகுதி உள்ளது. இதில், மான் உள்ளிட்ட விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி அவ்வப்போது, உயிரிழப்பது தொடர்ந்துவருவதாக அப்பகுதி இளைஞர்கள் இணையம் வாயிலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை காலை 11.30 மணியவில் வம்பன் பயிறு வகை ஆராய்ச்சி நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, 7 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்கோட்டை சரக வனத்துறை அதிகாரி திரு.சதாசிவம் அவர்கள் இறந்த மானை 12.30 மணிக்கு கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய புதுக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார்.

இதுபோன்ற சம்பவம் அப்பகுதியில் அடிக்கடி நடப்பதால் குறிப்பிட்ட இடைவெளிக்கு இடையில் வேகத்தடை அமைக்கவேண்டும் எனவும், காடுகளை சுற்றி சாலையோரம் வேலியமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.