தமிழகம்

தண்ணீர் என நினைத்து பாத் ரூம் கழுவும் ஆசிட்டை மதுவில் கலந்து குடித்த நபர்.! இறுதியில் நேர்ந்த பரிதாபம்.!

Summary:

சென்னை அருகே படப்பை அடுத்த வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளி. 63 வயது நிரம்பிய இவர் தன

சென்னை அருகே படப்பை அடுத்த வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளி. 63 வயது நிரம்பிய இவர் தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாட்டர் மது வாங்கி அதில் பாதியை குடித்துவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார்.

இதனையடுத்து மறுநாள் கழிவறை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து அவர் மீதம் வைத்திருந்த மதுவில் கலந்து குடித்து விட்டார். இதனையடுத்து வயிறுவலி, மற்றும் வாந்தி ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமணியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காளி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுப்பழக்கத்தினால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 


Advertisement