உயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.! இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா? - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் காதல் – உறவுகள்

உயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.! இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா?

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் அமராவதி. இவரது  மகள் அபி. இவர் சந்தோஷ் என்பவரை காதலித்து, தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அபியின் தாயார் அமராவதி ஊர் முழுவதும் தனது மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி உள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அபியின் கணவர் சந்தோஷ் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் அபியின் தாயாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அப்பொழுது அபியின் தாய் அமராவதி கூறியதாவது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். அதனை தொடர்ந்து எனது மூன்று பெண் பிள்ளைகளை நான்தான் கஷ்டப்பட்டு வளர்த்தேன். மேலும் ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துள்ளேன்.

      

இந்நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த எனது மகள் அபி, சந்தோஷ் என்பவரை காதலித்தார். அவர் ஏற்கனவே திருமணமானவர். மற்றும் குணம் சரியில்லாதவர். இது குறித்து எனக்கு தெரிய வந்தநிலையில், அதனை எனது மகளிடம் கூறி அவளை கண்டித்தேன். ஆனால் எனது பேச்சை கேட்காமல் அவள் சந்தோஷை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த நான் கோபத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டினேன் என  கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அபி மற்றும் சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo