தமிழகம்

ஒரு மாதகால நீட்டிப்பு! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விடுத்த அதிரடி அறிவிப்பு! வாகன ஓட்டிகள் நிம்மதி!

Summary:

days extended for processing fasteg method in toll

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நிலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனை தவிர்க்கும் வகையில் பாஸ்டேக் என்ற மின்னணு முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டுவந்தது. மேலும் இதற்காக சென்னை உள்பட பல முக்கிய  இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், சில வங்கிகளிலும் சில பாஸ்டேக் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் குறிப்பிட்ட தொகை செலுத்தி பெறப்படும் இந்த அட்டை வாகனத்தின் முகப்பு கண்ணாடியில்  ஒட்டப்பட்டிருக்கும். வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும் போது அங்கு.பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி மூலம் அட்டை ஸ்கேன்.செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தொடர்ந்து பாஸ்டேக் அட்டையில் உள்ள பணம் குறைந்தபின் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளவேண்டும்.

இந்த புதிய திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் நேற்று டிசம்பர் 15ந் தேதி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஸ்டேக் மின்னணு அட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் பல நடைமுறை சிக்கல் காரணமாகவும் பாஸ்டேக் திட்டத்தை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் ஜனவரி 15-ந் தேதிக்குள் வாகன ஓட்டிகள் அனைவரும் பாஸ்டேக் அட்டை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


Advertisement