BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மக்களே கவனம்.. செல்போனில் பரவுகிறது புதிய வகை வைரஸ்; சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை.!
செல்போன்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமானத்தில் இருந்து, தகவல் திருட்டுகள் தொடர்பான விஷயங்களும் அதிகரித்துவிட்டன. இதனை கண்டறியவும், தடுக்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தலை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது செல்போனில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நம்பகத்தன்மை இல்லாத இணைய பயன்பாடுகள் வழியே நமது செல்போனுக்கு வருகிறது.

இந்த வைரஸ் செல்போனில் வந்துவிடும் பட்சத்தில், அவை நமது செல்போனில் இருக்கும் எஸ்.எம்.எஸ், போட்டோ, செல்போன் அழைப்புகள் உட்பட பல விஷயங்களை திருடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் இணைய பயன்பாடுகளில் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.