தமிழகம்

குன்றத்தூர் அபிராமி வழக்கின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ!

Summary:

Current status of kuntrathur abirami

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய விஷயம் குன்றத்தூர் அபிராமி வழக்கு. சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளகாதலால் பெற்ற பிள்ளைகளை தாயே பாலில் விஷம் வைத்தும், தலையணையால் அமுக்கி கொன்ற விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது.

இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தலைமறைவாகி இருந்த அபிராமியை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அபிராமியின் கள்ள காதலர் சுந்தரத்தையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

https://cdn.tamilspark.com/media/18147k8z-abhirami-dubsmash.jpg

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிராமி, அவரது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோரை ஒரே வேனில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பின்னர் நீதிபதி வேல்முருகன் முன் 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement