தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கழுத்தை நெரித்த கடன் தொல்லையால், தோனி ரசிகர் விபரீத முடிவு.! 3 குழந்தைகள், மனைவியை தவிக்கவிட்டு சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, ராமநத்தம் அரங்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோபி கிருஷ்ணன் (வயது 34). இவரின் மனைவி அன்பரசி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இவர்களுக்கு பத்து மற்றும் எட்டு வயது என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்த அன்பரசி சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்திருக்கிறார். கிரிக்கெட்டர் தோனியின் மீது தீவிர பற்று கொண்டு ரசிகராக இருந்து வந்த கோபிகிருஷ்ணன், தோனிக்காக தனது வீட்டில் நிறத்தை சிஎஸ்கே வின் மஞ்சள் நிற வர்ணம் பூசி, அதன் மீது படங்களை வரைந்து புகழ் பெற்றிருந்தார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த கோபி கிருஷ்ணன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்து ஆன்லைன் பிசினஸ் செய்து வந்துள்ளார். இதற்காக உறவினர்களிடம் பல லட்சம் கடன் வாங்கிய நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் மன உளைச்சல் அடைந்த அவர், கடனை செலுத்த வழியில்லாமல் விழி பிதுங்கி வந்துள்ளார். இதனிடையே காணும் பொங்கலை முன்னிட்டு தனது ஊரில் விளையாடிக் கொண்டிருந்த கோபி கிருஷ்ணனை கடன் கொடுத்த தரப்பினர் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உச்சகட்ட மன வேதனை அடைந்த கோபிகிருஷ்ணன், நள்ளிரவில் தனது மனைவியிடம் கடன் கொடுத்தவர்கள் தன்னை தாக்கிய விபரத்தை தெரிவித்திருக்கிறார்.
அவர் கணவரின் மனதை தேற்றி உறங்க வைத்துள்ளார். பின் 1 மணிநேரத்தில் கண்விழித்த கோபி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.