தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இயற்கை உபாதை கழிக்கச்சென்ற சிறுமியை பின்தொடர்ந்த இளைஞர் மீது போக்ஸோ.. அதிரடி கைது.!
17 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, ஆத்தங்குடியை அடுத்துள்ள கூடலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நேற்று 17 வயதுடைய சிறுமி இயற்கை உபாதையை கழிக்கச்செல்கையில் நோட்டமிட்டு இருக்கிறார்.
இதனையடுத்து, குற்றச்செயல் எண்ணத்துடன் சிறுமியை பின்தொடர்ந்து ராஜசேகர் செல்லவே, சிறுமி இயற்கை உபாதையை கழித்தவாறு கயவனை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார்.
அவரின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், இதுகுறித்து விசாரித்து ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்துள்ளனர்.