என் அண்ணனை போட்டவனை நான் போட்டுட்டேன் - 17 வயது சிறுவன் 6 பேர் குழுவாக சேர்ந்து பழிதீர்த்த பயங்கரம்.!

என் அண்ணனை போட்டவனை நான் போட்டுட்டேன் - 17 வயது சிறுவன் 6 பேர் குழுவாக சேர்ந்து பழிதீர்த்த பயங்கரம்.!


Cuddalore Rowdy Murder Revenge Death

சகோதரன் கொலை செய்யப்பட்டதற்கு 17 வயது சிறுவன் பழிதீர்த்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம்பேட்டையில் வசித்து வருபவர் கண்ணன். இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம்வந்த நிலையில், கொலை., கொலை முயற்சி., கஞ்சா விற்பனை உட்பட பல்வேறு வழக்குகள் இவரின் பேரில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வெளியூரில் தங்கி வேலைபார்த்துவந்த கண்ணன் துக்க நிகழ்வுக்காக சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார்.

அங்கு தனது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணனை அரிவாள், கற்கள் உட்பட பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக தாக்கி கொலை செய்து தப்பி சென்றது. இந்த கொலை சம்பவத்தில் கண்ணன் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வரும் நிலையில், நிகழ்விடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

Cuddalore

முதற்கட்ட விசாரணையில், எம்.புதூர் புதுநகரில் வசித்து வரும் 17 வயது சிறுவன் கொலை சம்பவத்தை அரங்கேற்றியது உறுதியானது. சிறுவனின் சகோதரர் காமராஜை 2020-ல் கண்ணன் கொலை செய்துள்ளார். இதற்கு பழிவாங்க சிறுவன் தனது அக்கா கணவர் உட்பட நண்பர்களுடன் இணைந்து கண்ணனை கொலை செய்துள்ளான். 

கொலையாளிகளாக 6 பேர் அடையாளம் காணப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கத்தி உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.