ஆன்லைனில் அதிகமாக பர்சேஸிங் செய்றீங்களா?.. நீங்கள்தான் டார்கெட்... ரூ.22.50 இலட்சம் இழந்த கல்லூரி மாணவி..! உஷார்..!!

ஆன்லைனில் அதிகமாக பர்சேஸிங் செய்றீங்களா?.. நீங்கள்தான் டார்கெட்... ரூ.22.50 இலட்சம் இழந்த கல்லூரி மாணவி..! உஷார்..!!


cuddalore-college-girl-cheated-by-online-fraud-gang

கார் பரிசாக கொடுப்பதாக கூறி கல்லூரி மாணவியிடம் ரூபாய் 22 லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி, இணையவழியில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.  கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அவரின் வீட்டிற்கு கல்கத்தாவில் இருந்து தபால் ஒன்று பெறப்பட்ட நிலையில், அதில் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள கார் தங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது எனவும், காருக்கு வரி செலுத்துவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதனை நம்பிய மாணவியும் தனது ஓய்வு பெற்ற அரசுபள்ளி ஆசிரியரான தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தவணை முறையில் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறாக மொத்தமாக ரூபாய் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Cuddalore

பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர் ஒருகட்டத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்யவே, இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி, கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பகுதி நேர வேலை, பம்பர் பரிசு என்று எதனையும் நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கோரிக்கை அதிகாரிகள் வைத்துள்ளனர்.