தமிழகம் லைப் ஸ்டைல்

பிறந்து 14 நாட்களே ஆன கன்று குட்டி, பால் சுரக்கும் அதிசயம்.! ஈரோடு அருகே நடக்கும் சம்பவம்.! வைரல் வீடியோ.!

Summary:

Cow calf giving milk after 14 days of birth near erode

பிறந்து 14 நாட்களில் பெண் கன்றுக்குட்டி ஓன்று பால் தரும் சம்பவம் ஈரோடு அருகே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோடு அருகே உள்ள புலவன் பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவரின் மாடு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெண் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. குட்டி பிறந்து வெறும் 14 நாட்களே ஆன நிலையில் குட்டியின் மடி பெரிதாக இருப்பதை பார்த்த உரிமையாளர் குட்டியின் மடியில் பால் வருகிறதா என பார்த்துள்ளார்.

அவர் சந்தேகப்பட்டதுபோல கன்றுக்குட்டியின் மடியில் இருந்து பால் வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலாகவே மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளார்கள். பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மாடு - கன்றுக்குட்டி இரண்டையும் சோதித்துவிட்டு 100 பிரசவத்தில் 1 பிரசவம் இதுபோன்று நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், தாய் பசு கர்ப்பமாக இருந்தபோது பால் சுரப்பதற்கான கார்மோன்கள் உருவாகும், அந்த கார்மோன்கள் எதேச்சையாக கன்றுக்குட்டியின் இரத்தத்தில் கலந்திருக்காலம். இதனால்தான் கன்றுக்குட்டி பால் சுரப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


Advertisement