தமிழகம் காதல் – உறவுகள்

காவிரி கரையோரத்தில் சடலமாக கிடந்த இருவர்! அருகில் கிடந்த அதிர்ச்சி பொருள்! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

couple commited suicide

திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். 30 வயது நிறைந்த இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தென்னூர் இனாம்தோப்பு பகுதியை சேர்ந்த காவியா என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரமேஷ் இளம் பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு திருச்சி முத்தரசநல்லூர் அருகேயுள்ள பழுவூர் காவிரி கரைக்கு சென்றுள்ளார். அங்கு வெகுநேரம் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த அவர் ஆற்றில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டுஇருந்துள்ளார். ஆனால் அடுத்த சிலமணி நேரத்தில் வாயில் நுரை தள்ளி இருவரும் சரளமாக ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அருகில் விஷ பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காரில் இருந்த செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்துகொண்ட பெண் சங்கீதபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் லீனா என்பதும், 18 வயது நிறைந்த இவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.

 மேலும் அவர் ரமேஷின் காரில் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்களது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement