மக்களே உஷார்.! வீடு வீடாக சென்று கொலை செய்யும் தம்பதியினர், போலீசார் விடுத்த அதிரடி அறிவிப்பு.!

மக்களே உஷார்.! வீடு வீடாக சென்று கொலை செய்யும் தம்பதியினர், போலீசார் விடுத்த அதிரடி அறிவிப்பு.!


couble murder people for jewels and money


சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் ஓய்வுபெற்ற அரசு பத்திரிக்கையாளர் மற்றும் அவரது மனைவி விஷாலினி. இவர்கள் இருவரும் தங்களது பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டு வேலை செய்வதற்காக ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரும் , அவரது மனைவி பூலட்சுமியும் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதன்பின்பு ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி வீட்டில் தனியாக இருப்பதை நன்கு அறிந்த அவர்கள் தங்கள் வைத்திருந்த இரும்பு ராடால் இருவரையும் அடித்துக் கொடூரமாக கொன்றுவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு கிடந்த இரும்பு ராடை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் ஆவடி பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சுரேஷ் குமார் மற்றும்  பூலட்சுமியை கண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கொலை நடந்த வீட்டில் கிடைத்த தடயங்களை வைத்து அவர்கள் தான் கொலை செய்தனர் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில்,இவர்கள் குறித்து விசாரித்ததில் இருவர் மீது ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 3 வயது சிறுவனுடன் சுற்றித் திரியும் இவர்கள், வீடு வாடகைக்கோ அல்லது வீட்டில் வேலை கேட்டு வந்தாலோ உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு போலீசார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!