தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு.. துபாயிலிருந்து திருநெல்வேலி வந்தவருக்கு கொரோனா! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் மருத்துவம் Covid-19

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு.. துபாயிலிருந்து திருநெல்வேலி வந்தவருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 350 பேருக்கு மேல் தொற்றியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் சென்னையில் சிகிச்சை பெற்ற முதல் நபர் குணமடைந்துவிட்டார். மீதமுள்ள 8 பேரில் 4 பேர் சென்னையிலும், 2 பேர் ஈரோட்டிலும, கோவை மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கடைசியாக கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் கலிபோர்னியாவில் இருந்து வந்த 64 வயது பெண். இவர் ஸாடான்லி மருத்துவமனையிலும் துப்யிலிருந்து வந்த 43 வயதான மற்றொரு நபர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo