தமிழகம்

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

Summary:

Corono affected people counts in tamilnadu

சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த கொடிய வைரசால் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. மேலும் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த முடியாமல்   அமெரிக்கா இத்தாலி, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவில் திண்டாடி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி இதுவரை 11000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


மேலும் தமிழகத்தில் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.118பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 


Advertisement