தமிழகத்தில் அசுர தாண்டவமாடும் கொரோனா! இன்று மட்டும் 477 பேருக்கு பாதிப்பு உறுதி!



corono-affected-people-counts-in-tamilnadu-tsl8cq

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய வைரசால் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை  கட்டுப்படுத்த நாடு முழுவதும்  ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585-ஆக உயர்ந்துள்ளது. 

corono

இவற்றில் சென்னையில் மட்டும்  332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  மேலும் கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைதொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 74 -ஆக உயர்ந்துள்ளது.