தமிழகம்

சென்னையில் அசுர தாண்டவமாடும் கொரோனா! மண்டலம் வாரியாக கொரனோ பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இதோ!

Summary:

Corono affected people counts in chennai

இந்தியாவில் கொரோனோ வைரஸ் அதிவேகமாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இத்தகைய கொரோனா வைரஸால் இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில்  சென்னையில் மட்டும் மொத்தம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் 4023பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ராயபுரம் மண்டலம்  முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து தண்டையார்பேட்டையில் 3019 பேர், தேனாம்பேட்டையில் 2646 பேர், கோடம்பாக்கத்தில் 2539 பேர், திருவிக நகரில் 2273 பேர், அண்ணாநகரில் 2068 பேர், அடையாரில் 1325 பேர், வளசரவாக்கத்தில் 1088 பேர், திருவெற்றியூரில் 870 பேர், அம்பத்தூரில் 828 பேர், மாதவரத்தில் 650 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெருங்குடியில் 421 பேர், சோழிங்கநல்லூரில் 420 பேர், ஆலந்தூரில் 412 பேர், மணலியில் 343 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement