சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்! என்ன காரணம்?

சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்! என்ன காரணம்?



Corona will increased in chennai

சென்னையில் மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி கொரோனா நோய்த் தடுப்பு சிறப்பு அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில்தான் உள்ளனர்.

corona

சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. நகரில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று நேற்று புதிய உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 509 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

சென்னையில் கடந்த 9 நாள்களாக கோயம்பேடு சந்தை, வடசென்னை பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என நாளொன்றுக்கு சுமாா் 3,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு சந்தையில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வடசென்னை மற்றும் திருவான்மியூா் சந்தை பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடர்புடையவர்களுக்கு தீவிரமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிமாக இருக்கும். அதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என
சென்னை மாநகராட்சி கரோனா நோய்த் தடுப்பு சிறப்பு அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.