இந்தியா

கருணை காட்டிய கொரோனா.! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்.! 100-க்கும் கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு.!

Summary:

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கிலும், உயி

கொரோனா தொற்றின் 2-வது அலை தமிழகத்தில் அதிவேகமாக பரவி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கிலும், உயிரிழப்பு ஆயிரக்கணக்கிலும் இருந்துவந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், தற்போது கொரோனா 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,70,678 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,553 பேர் கொரோனா சிகிச்சையால் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,97,336 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement