கண்கலங்கவைக்கும் இன்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை..! மொத்த இறப்பு, பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

கண்கலங்கவைக்கும் இன்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை..! மொத்த இறப்பு, பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?



Corona update Tamil Nadu and Chennai

தமிழகத்தில் இன்று மேலும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துவருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இன்றும் மட்டும் புதிதாக  5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

corona

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,159- ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 986 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,11,054 ஆக அதிகரித்துள்ளது. சற்று ஆறுதலாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,005 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய தேதியில் 52,810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.