இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?



Corona stage in tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவால் உலகின் பல நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 4வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

corona

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் நேற்று நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.