மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,72,751 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,665 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 2,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 2,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.