என்ன சார் நடக்குது!! கண்கலங்கவைக்கும் கொரோனா மரணங்கள்!! நேற்று மட்டும் தமிழகத்தில் எத்தனை பேர் கொரோனாவால் மரணம் தெரியுமா?Corona latest death count and positive count update in Tamil Nadu

தமிழகத்தில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காட்டு தீயாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4,640 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போதுவரை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த டிஷார்ஜ் எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் தற்போதைய நிலவவரப்படி 1,08,855 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் மக்களை கண்கலங்கவைக்கும் விதமாக, கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.