தமிழகத்தில் உச்சகட்டத்தை தொடும் பரவல்! ஊரடங்கை தளர்த்த வாய்ப்புள்ளதா?

தமிழகத்தில் உச்சகட்டத்தை தொடும் பரவல்! ஊரடங்கை தளர்த்த வாய்ப்புள்ளதா?


Corona increased in tamilnadu

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.  தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 97 ஆண்கள், 64 பெண்கள் என 161 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்து இருக்கிறது.

corona

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஒரே நேரத்தில் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை என மருத்துவ நிபுணர் குழுவினர் கூறுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் சில மாவட்டங்களில் அதிகரித்து உள்ளது. அதேபோல் பல மாவட்டங்களில் குறைந்து இருக்கிறது. இந்த அளவீடுகளை வைத்து பார்த்தால், மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது என கூறியுள்ளனர்.