தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை எவ்வளவு?

Summary:

corona increased in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலே கொரோனா அதிகமாக பரவிவரும் சென்னையில் வழக்கம்போல் அதிகபட்சமாக இன்று 2,393 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் மட்டும் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement