தமிழகம் Covid-19

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.! அதிகரிக்கப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..! இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம்.!

Summary:

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது.

 முதல் அலையை விட இது இன்னும் மோசமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,819 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2564 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா என்பது குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement