மக்களே உஷார்.! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இது தான் காரணம்.! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!corona-increased-in-tamilnadu-3HF9X3

உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் வேகமாக பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சென்னை ராஜிவ்காந்தி சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

corona

எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணியும் பழக்கத்தை மறந்து விடக் கூடாது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரட்டை உருமாறிய கொரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிப்படியாக கொரோனாவை குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.