தமிழகம் Covid-19

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona increased in india

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்தியாவில் அதிகபட்சமாக கடந்த 5 ஆம் தேதி 3,875 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்திய கொரோனா, இப்போது ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்துக்குள் கொரோனா 97 பேரின் உயிரையும் பறித்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 53 பேர் இந்த வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,206 ஆகவும் அதிகரித்துள்ளது. 


Advertisement