தமிழகம் Covid-19

சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! இரும்பு வேலி அடைத்து சீல் வைக்கப்படும் பகுதிகள்.!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர வைர

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்துள்ளதால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை ராயபுரம் அருகே உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள நான்கு தெருக்களில் மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள ரத்தினம் தெரு, கிருஷ்ணப்பா குளம் தெரு, நம்மாழ்வார் தெரு, கொண்டல் தெரு ஆகிய 4 தெருக்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அந்த 4 தெருக்களிலும் இரும்பு வேலியால் அடைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தெருக்கள் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், பொதுமக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.


Advertisement