தமிழகம் Covid-19

அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona increased in ariyalur

அரியலூரில் 168 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

திகமிழகத்தில் சென்னையில் மட்டும் நாள்தோறும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ந்தேதி உறுதியானது. மேலும், அரியலூரில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 168 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் பலர் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது.


Advertisement