தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி.! மருத்துவமனையில் அனுமதி!

Summary:

corona affected corona

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே நடந்த பரிசோதனையில் விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு கொரோனா என்ற தகவலால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement