அந்த மனசுதான் சார் கடவுள்..! குழந்தை போல் ஓடிவந்த பிச்சைக்காரர்.! பசியைப் போக்கிய காவல்துறை.? கண்கலங்க வைக்கும் காட்சி.!
பசியுடன் ஓடிவந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு போலீசார் உணவும், தண்ணீரும் வழங்கும் வீடியோ காட்சி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த திடீர் முடக்கத்தால் அன்றாட கூலி தொழிலார்கள், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், வாய்யிலா ஜீவன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உணவை பார்த்ததும் குழந்தை போல் ஓடிவரும் பிச்சைக்காரர் ஒருவருக்கு இரண்டு போலீசார் உணவும், தண்ணீரும் வழங்கும் காட்சி பார்ப்போரை நெகிழவைத்துள்ளது. வெளியே சென்றால் என்ன ஏதுன்னு கூட கேட்காமல் காட்டுமிராண்டி தனமாக அடிக்கும் போலீசாருக்கு மத்தியில், இந்த இரண்டு போலீஸ் காரர்களின் மனிதாபினம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
போலீஸ் அடிக்குராங்க சார் 😒 🙏🏻 #IndiaFightsCorona pic.twitter.com/45sEIp4aLB
— நைனா ✍️ (@Writer_Naina) March 31, 2020