மனைவியின் போலீஸ் சீருடையை அணிந்து கணவர் செய்யும் செயல்.! போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு சென்ற புகார்.!

மனைவியின் போலீஸ் சீருடையை அணிந்து கணவர் செய்யும் செயல்.! போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு சென்ற புகார்.!


complaint on women police husband

புதுக்கோட்டை மாவட்டம், தெம்மாவூர் அருகே காரடிவயல் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர் தஞ்சாவூரில் காவல்துறையில் போலீசாராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இளங்கோவன், வளர்மதியின் சீருடையை அணிந்து போட்டோ எடுத்து அதை, முகநுால் பக்கத்தில் வைத்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

மேலும், மனைவியின் போலீஸ் சீருடையை அணிந்தும், பைக்கில் 'POLICE' என எழுதியும், போலீஸ் போல இளங்கோவன் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி தலைவி அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், இளங்கோவன், தனது மனைவியின் சீருடையை அணிந்து போட்டோ எடுத்து அதை, முகநுால் பக்கத்தில் வைத்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், போலீஸ் போல இளங்கோவன் வலம் வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார்.