"ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான 5 நபர்களால் பாலியல் தொல்லை..." ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.!!



college-students-tragic-suicide-facebook-friends-sexual

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மம்ஷாபுரத்தை சேர்ந்த கர்ணன் மகன் மாரீஸ்வரன் (21). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் தங்கி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்த நிலையில் பல அதிர்ச்சிகர உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ரயில் முன் பாய்ந்து  உயிரிழந்த மாரீஸ்வரனின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்த நிலையில், பேஸ்புக் வழியாக அறிமுகமான திருவெறும்பூரை சேர்ந்த இளங்கோவனை சந்திக்க மாரீஸ்வரன் அடிக்கடி அரியமங்கலம் சென்று வந்துள்ளார். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை சென்ற போது அந்த ஆண் நண்பர் உட்பட மொத்தம் 5 பேர் மாரீஸ்வரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் பணத்தை பிடுங்கியதாக கூறப்படுகிறது.

tamilnadu

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாரீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த கடிதத்தை மீட்ட போலீசார் மாரீஸ்வரனுக்கு பாலியல் தொல்லையளித்த இளங்கோவன்(20), பா பவித்ரன்(21), முத்துராஜா( 21 ), பாண்டீஸ்வரன்(18 ), ஆண்டனி சஞ்சய்(22) ஆகிய 5 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஜூஸில் போதை மருந்து..." பள்ளி மாணவர்கள் பலாத்காரம்.!! இளைஞர் கைது.!!

இதையும் படிங்க: "ரவுடியின் கள்ளக்காதலிக்கு லவ் டார்ச்சர்..." 65 வயது முதியவர் அடித்து கொலை.!! 3 பேர் கைது.!!