விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் 19 வயது மாணவி தற்கொலை... போலீசார் விசாரணை...
தேனி மாவட்டம் போடி கிருஷ்ண தேவராயர் தெருவை சேர்ந்தவர்கள் அய்யப்பன்- முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 19 வயதில் மகாலட்சுமி என்ற மகள் உள்ளார். மகாலட்சுமி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர விரும்பியுள்ளார்.
இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் மகாலட்சுமி. அதற்கு அந்த கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அதிக பணம் தேவைப்படும் எனவே அந்த கல்லூரியில் சேர முடியாது என்று கூறி அருகில் உள்ள கல்லூரியில் சேர்த்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் மகாலட்சுமி.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனிமையில் இருந்ததை அடுத்த பூச்சு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.