கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு எச்சரிக்கை: மின்னஞ்சலில் பகிரங்க மிரட்டல்..! பாதுகாப்பு அதிகரிப்பு.!

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு எச்சரிக்கை: மின்னஞ்சலில் பகிரங்க மிரட்டல்..! பாதுகாப்பு அதிகரிப்பு.!


Coimbatore SP Office Mail Intimation Petrol Bomb 

 

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு, நேற்று மத்திய அரசுக்கு எதிரான வசனத்துடன் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, கோவை நகரில் உள்ள பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இசக்கி என்ற நபரின் பெயருடன், அலைபேசி எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், போலியான மின்னஞ்சல் கணக்குடன் மிரட்டல் விடுக்கப்பட்டதை உறுதி செய்தனர். 

மேலும், பெட்ரோல் குண்டு வதந்தியை உறுதி செய்த அதிகாரிகள், பாதுகாப்பு கருதி மக்கள் கூடும் பொதுஇடங்களில் பாதுகாப்பையும் அதிகரித்தனர்.