பலாத்கார முயற்சியில் பெண் கொலை?.. 5 மாத கர்ப்பிணி உடல் சடலமாக அழுகிய நிலையில் மீட்பு.. கோவையில் பரபரப்பு.!

பலாத்கார முயற்சியில் பெண் கொலை?.. 5 மாத கர்ப்பிணி உடல் சடலமாக அழுகிய நிலையில் மீட்பு.. கோவையில் பரபரப்பு.!


Coimbatore Ramanathapuram Sungam NH Woman Body Recovered Like Murder Death

நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புறத்தில் இருந்து 45 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் 5 மாத கர்ப்பிணி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தவர் என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் - சுங்கம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள முட்புதரில், பெண்ணொருவரின் சடலம் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் காணப்பட்டது. இதனைகவனித்த அப்பகுதி மக்கள், இராமநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நேற்று மாலை பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்மணிக்கு 45 வயது இருக்கும் என்றும், அவர் அப்பகுதியில் மனநலம் பாதித்து சுற்றி வந்தவர் என்றும் முதற்கட்ட வ்சிரணையில் உறுதியானது. 

Coimbatore

மேலும், அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் காய வைக்கப்படும் துணிகளை எடுத்து அணிந்து வசித்து வந்த நிலையில், அவருக்கு அப்பகுதி மக்கள் அவ்வப்போது உணவு வழங்கி பாதுகாத்து வந்துள்ளனர். இதற்கிடையில் தான் அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரின் தலை, கால், உடல் பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளது. தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர்.

சடலமாக மீட்ட போது பெண்மணி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை மர்ம நபர் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாகி இருக்கலாம். மற்றொரு கற்பழிக்கும் முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சம்பவ இடத்திற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் காவல் துறையினர் கண்காணித்து வரும் நிலையில், போதையில் உலாவும் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.